செய்திகள் பிந்திய செய்திகள் முல்லைத்தீவு

புலிகளின் ஆயுதம் தேடி கோம்பாவிலில் அகழ்வு

புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் கோம்பாவில் பகுதியில் வீதி ஓரத்தில் உள்ள இரும்பு கடை அமைந்துள்ள வளாகத்தில் புலிகளால் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (09) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் முன்னரும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் நேற்று காலை தொடக்கம் மாலை வரை தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இரண்டு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அங்கு எதுவித பொருட்களும் கிடைக்கவில்லை.

Related posts

நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு!

G. Pragas

மீன் பிடிக்க சென்றவர் மரணம்!

G. Pragas

மின்கம்பம் வீழ்ந்ததால் காட்டுயானை பலி

reka sivalingam