செய்திகள் பிராதான செய்தி

புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரு எம்பிகள் உட்பட எழுவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் மலேசியாவின் நாடாளுமன்றத்தின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட எழுவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பேராவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, பேராக் மற்றும் கோலாலம்பூரில் தலா ஒருவரும் சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய நேரப்படி இன்று (10) காலை 9 மணியளவில், புக்கிட் அமானை சேர்ந்த பெலிஸ் குழுவினர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இல்லத்திற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர்

2012ம் ஆண்டின் பாதுகாப்புக் குற்றங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

தேசிய மட்ட ஈட்டி எறிதலில் வேலணை மத்திய கல்லூரி வெண்கலம்!

G. Pragas

சர்ச்சையைக் கிளப்பியுள்ள “யோக்கர்” திரைப்பட போஸ்டர்

G. Pragas

ஜப்பானுக்கு பறக்கிறார் மைத்திரி

G. Pragas

Leave a Comment