செய்திகள் பிந்திய செய்திகள்

புலிகள் குறித்து சர்ச்சையான கருத்து: விஜயகலா மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (01) கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 13ம் திகதி எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த விசாரணையின்போது சி.ஐ.டி அதிகாரிகள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்ட நீதவான், வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Related posts

வீடமைப்பு அதிகார சபை ஒப்பந்த ஊழியர்களுக்கு மீள் நியமனம்

Tharani

தாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலிடம்

Tharani

யாழ் – சென்னை விமான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை

reka sivalingam