செய்திகள் யாழ்ப்பாணம்

பூசகரை மாற்றியதாக முரண்பாடு

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் உரிமையாளர் என கூறப்படும் குருக்களை மாற்றியதால் இன்று (22) அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், ஆலய நிர்வாகம் இயங்கவில்லை. ஆலயத்திற்கு தனிப்பட்ட நபர்கள் சிலர் உரிமை கோரி வருகின்றனர். இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதால், 11 வருடங்களாக நிர்வாகம் இயங்கவில்லை.

இருந்தபோதிலும் அதன் உரிமையாளர் என கூறப்படும் குருக்களே பூசை போன்றவற்றையும் தொடர்ந்து கவனித்து வந்தார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு பூஜை செய்து வரும் குருக்கள் திடீரென நிறுத்தப்பட்டு வேறு ஒரு அர்ச்சகர் ஆலயத்தில் காலை பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கூடிய சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார், கொரோனா காலத்தில் ஆலயத்தில் இவ்வாறு ஒன்றுகூட முடியாது என கூறி உடனடியாக அனைவரையும் வெளியேற்றினர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வலிகாம பிரதேசத்தில் இறைச்சி விற்பனை தடை

reka sivalingam

அரசியல் நடவடிக்கைகளில் மீண்டும் சஜித்

reka sivalingam

எரிபொருள் விற்பனை வீழ்ச்சி

K. Mathura