in

பூச்சுற்றுகின்றனவா தமிழ்க் கட்சிகள்? இலங்­கை­யிலிருந்து இது­வரை எந்­த­வொரு ஆவ­ண­மும் ஐ.நாவுக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை!

ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வைக்கு
ஆவ­ணங்­களை அனுப்­பு­வ­தற்­கான
கால அவகாசம் முடிந்து 2 வாரங்கள்;
பூச்சுற்றுகின்றனவா தமிழ்க் கட்சிகள்?
இலங்­கை­யில் இருந்து இது­வரை எந்­த­வொரு ஆவ­ண­மும் ஐ.நாவுக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை
சர்­வ­தேச மனித உரி­மைச் செயற்­பாட்­டா­ளர் வெளி­யிட்ட அதிர்ச்­சித் தக­வல்­கள்

ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யின் 48ஆவது கூட்­டத்­தொ­ட­ரில், பாதிக்­கப்­பட்ட தரப்­பு­கள் சார்­பில் அறிக்­கை­கள் சமர்ப்­பிப்­ப­தற்­கான கால அவ­கா­சம் ஓகஸ்ட் 22ஆம் திகதி நள்­ளி­ர­வோடு முடி­வ­டைந்­து­விட்­டது. ஆனால் இந்­தக் கால எல்­லைக்­குள் இலங்­கை­யி­லி­ருந்து தமி­ழர்­கள் சார்­பில் எந்­த­வொரு அறிக்­கை­யும் ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வைக்­குச் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால், இந்­தக் கால அவ­கா­சம் முடிந்த பின்­னரே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ்த் தேசி­யக் கட்­சி­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்கு கடி­தம் அனுப்­பும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கின்­றன. இனி­மேல் அனுப்­பப்­ப­டும் எந்­த­வொரு அறிக்­கை­யும் 48ஆவது கூட்­டத்­தொ­ட­ரில் சேர்த்­துக் கொள்­ளப்­ப­டு­தற்­கான சாத்­தி­யமே இல்லை இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கட்­சி­க­ளின் திரு­கு­தா­ளத்தை அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளார் சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரத் தளங்­க­ளில் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­கா­கத் தொடர்ச்­சி­யா­க இயங்­கி­வ­ரும் மனி­த­வு­ரி­மைச் செயற்­பாட்­டா­ள­ரான மரி­ய­தாஸ் மோகன்­ராஜ் (பொஸ்கோ).
இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

ஐ.நா. மனித உரி­மை­கள் கூட்­டத்­தொ­ட­ருக்கு அறிக்கை சமர்ப்­பிக்க விரும்­பும், பாதிக்­கப்­பட்ட தரப்­பு­கள் குறித்த கூட்­டத்­தொ­டர் ஆரம்­ப­மா­வ­தற்கு 21 நாள்­க­ளுக்கு முன்­னரே அவற்றை அனுப்பி வைக்க வேண்­டும். அது­வும் ஐ.நாவின் Ecosoc அங்­கீ­கா­ரம் பெற்ற அமைப்­பு­கள் ஊடாக அனுப்­பப்­ப­டும் அறிக்­கை­கள், கடி­தங்­களே உத்­தி­யோ­க­பூர்வ ஆவ­ணங்­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டும். தனியே கட்சி ரீதி­யாக நேர­டி­யாக அனுப்­பும் ஆவ­ணங்­கள் ஒரு­போ­தும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது.

அந்த வகை­யில் ஜெனிவா நேரப்­படி கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி நள்­ளி­ர­வுக்கு முன்­ன­தாக ஈழத்­த­மி­ழர்­கள் சார்­பி­லான ஆவ­ணங்­கள் அனுப்­பப்­பட்­டி­ருக்க வேண்­டும். புலம்­பெ­யர் தேசங்­க­ளில் இயங்­கும் அமைப்­பு­கள் ஊடாக அவ்­வாறு 27 ஆவ­ணங்­கள் இது­வரை ஐ.நா.வில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போ­தும், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இலங்­கை­யில் ஈழத்­த­மி­ழர்­கள் சார்­பில் இருந்து எந்­த­வொரு அமைப்­பு­களோ, கட்­சி­களோ குறித்த கால அவ­கா­சத்­துக்­குள் ஆவ­ணங்­கள் எத­னை­யும் அனுப்பி வைக்­க­வில்லை. அதே­வேளை, மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரி­னால் இலங்கை தொடர்­பில் வாய்­மொ­ழி­மூ­ல­மாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள அறிக்­கை­யின் இறுதி வடி­வம் சகல நாடு­க­ளுக்­கும் அனுப்­பப்­பட்டு விட்­டது. இலங்கை அர­சாங்­க­மும் தன் சார்­பி­லான அறிக்­கையை ஐ.நா.வுக்கு அனுப்­பி­வைத்­துள்­ளது.

இத்­த­கைய நிலை­யில், கால அவ­கா­சம் முடிந்த பின்­னர் இப்­போ­து­தான் அவ்­வா­றான ஆவ­ணங்­களை தமிழ்த் தேசி­யக் கட்­சி­க­ளும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் அனுப்பி வைக்க இருப்­ப­தாக தக­வல்­கள் வெளி­யா­கின்­றன. உண்­மை­யில் இது மக்­களை ஏமாற்­றும் செயற்­பா­டு­தான். இனி­மேல் அனுப்பி வைக்­கப்­ப­டும் எந்­த­வொரு ஆவ­ண­மும் 48ஆவது மனித உரி­மை­கள் பேரவை அமர்­வில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட மாட்­டாது.

வேண்­டு­மா­னால் எதிர்­வ­ரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள அமர்­வில் சேர்த்­துக் கொள்­ளப்­ப­ட­லாம். அது­கூட ஐ.நா.வால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஏதே­னும் அமைப்­பின் ஊடாக அனுப்­பி­னால் மாத்­தி­ரமே சாத்­தி­யம். மாறாக கட்சி சார்­பாக அனுப்­பி­வைக்­கப்­ப­டும் ஆவ­ணங்­கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்­ற­வை­யா­கக் கணிக்­கப்­ப­டு­வ­தால், கூட்­டத்­தொ­ட­ரில் சேர்த்­துக் கொள்­வ­தற்­கா­கப் பரி­சீ­லிக்­கப்­ப­டாது – என்­றார்.

இதன் மூலம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ்த் தேசி­யக் கட்­சி­கள் கால அவ­கா­சம் முடிந்த பின்­னரே ஐ.நா.வுக்கு கடி­தம் அனுப்­பு­வ­தா­கக் கூறி தமிழ் மக்­களை ஏமாற்­றும் செயல் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது என அவ­தா­னி­கள் கூறு­கின்­ற­னர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 1700 கிலோ மஞ்சளுடன் தமிழகத்தில் இருவர் கைது!

கொழும்­பின் அரா­ஜ­கம் ஐ.நாவில் அம்­ப­லப்­ப­டும் சம்­பந்­தன் தெரி­விப்பு!