செய்திகள் பிந்திய செய்திகள்

பூஜித் – ஹேசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களது வழக்கு நேற்று (06) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே குறித்த இருவரையும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காதமை காரணமாக இவர்கள் இருவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜசிந்தா போன்ற தலைவரே எமது நாட்டுக்குத் தேவை – பிமல்

G. Pragas

அறிவியல் தமிழ் கருத்தரங்கு

G. Pragas

முல்லைத்தீவில் வீதிப் பாதுகாப்பு நடை பவனி

G. Pragas

Leave a Comment