in ,

பூநகரி பிரதேச சபையில்- 2022 க்கான பாதீடு நிறைவேற்றம்!

பூநகரி பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு = செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சபையின் அமர்வு, தவிசாளர் சி.சிறீரஞ்சன் தலைமையில் நேற்று ஆரம்பமானது. தவிசாளர், தனது தலைமை உரையைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான வரவு = செலவுத் திட்டத்தை சபைக்கு சமர்ப்பித்தார்.

வரவு =செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

20 உறுப்பினர்களை கொண்டுள்ள சபையில், 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் மூன்று உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 5 உறுப்பினர்கள் சபைக்கு நேற்றுச் சமுகமளிக்கவில்லை. அதனால், பாதீடு 9 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

ஆரிய குளத்தில் மதச்சின்னத்தை திணித்தால் -இறந்தோரின் அஸ்தி கரைக்கும் நீர்நிலையாக மாற்றிவிடுவோம்!

அரச அலுவலர்களின் ஓய்வு வயது 65!