இந்திய செய்திகள்செய்திகள்

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது தெரிவித்தார்.

இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

21 வயதில் திருமணம் நடந்தால்தான் பெண்களால் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதை ஏற்று
தற்போது 21 வயதாக திருமண வயதை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் படியாக அமைச்சரவை இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிறார் திருமண சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றிலும் திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940