செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பெண்களில் ஒருவருக்கும் வாக்களியுங்கள் – இவ்வாறு கோருகிறார் உமாசந்திரா

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“இலஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படை தன்மையுடனான உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எனவே நீங்கள் தேர்தெடுக்கின்ற கட்சியில் முதலில் பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

அவளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் நீங்கள் இதனை செய்ய வேண்டும். பின்னர் ஏனைய இரண்டு உறுப்பினர்களையும் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்” – என்றார்.

Related posts

ஆசிரியர் சுகயீன போராட்டத்திற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்

G. Pragas

துருக்கியில் படகு கவிழ்ந்து 08 சிறுவர்கள் உயிரிழப்பு

Tharani

எதிர்க்கட்சி தலைவர் பதவி! நாளை இறுதி தீர்மானம்!

Tharani