செய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா

பெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு – இருவர் கைது

வவுனியா – பூந்தோடம் அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வழிபடச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலில் கடந்த (26) சனிக்கிழமை வழிபடச் சென்ற பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருடன் இணைந்து சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நேற்று முன் தினம் (27) மாலை இளைஞர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மற்றறைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இரத்தினபுரியில் மகளிர் தேசிய தின வைபவம்

Tharani

யாழில் கட்டியிருந்த மாட்டை களவாடி இறைச்சியாக்கிய விஷமிகள்

G. Pragas

எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க ஈரான் பலமாக வேண்டும்!

Tharani