சினிமா செய்திகள்

பெயரை மீண்டும் மாற்றிய நடிகை

நடிகர்கள் பெரும்பாலும் சினிமாவுக்காக தங்களின் இயற்பெயரை மாற்றி தான் வைத்துள்ளனர். பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை படங்களில் நடித்த நடிகை அதிதி மேனன் நான்காவது முறையாக
பெயரை மாற்றியிருக்கிறார்.

கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர் சாய்னா சந்தோஷ். இப்பெயரில் அங்குள்ள டிவி சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழில் நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என பெயரை மாற்றி அறிமுகமானார். அந்த பட இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட படத்திலிருந்து விலகினார்.

பின்னர் அதிதி மேனன் என பெயரை மாற்றி பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை படங்களில்
நடித்தார். இதில் பட்டதாரி படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் அபி சரவணனை
காதலித்தார். இருவரும் மதுரையில் ரகசியமாக திருமணம் செய்துள்ளனர். திருமணம் ஆன தகவல்
வெளியே தெரிந்தால் அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு பாதிக்கும் என்பதால், திருமணம் பற்றி
வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன்,
மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

பின்னர் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்.
அபி சரவணனை தான் திருமணம் செய்யவில்லை என அதிதி கூறினார். இதற்கிடையே, அபி, அதிதி
தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடக்கிறது.

இந்நிலையில் அதிதி மேனன் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றி மலையாள படங்களில் நடிக்க
தொடங்கி உள்ளார். சாய்னா சந்தோஷ், ஆதிரா சந்தோஷ், அதிதி மேனனை தொடர்ந்து தற்போது
நான்காவது முறையாக பெயரை மாற்றியிருக்கிறார்.

Related posts

இறைச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட பன்றிகள் கைப்பற்றல்

G. Pragas

சஜித் கூட்டணி வேட்பாளர் தேர்வுக்குழு இன்று கூடுகிறது

reka sivalingam

உலக வங்கியின் நிதி உதவி

Tharani