செய்திகள் பிரதான செய்தி

பெய்ரூட் அனர்த்தம்; இலங்கை தூதரகம் சேதம் -இலங்கையர்கள் பலர் காயம்!

லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் குறித்த தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என லெபனானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தில் இலங்கையர்கள் பலரும் காயமடைந்துள்ளதுடன், இலங்கையர்கள் வசித்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளன என்று அந்நாடுக்கான இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன தெரவித்துள்ளார்.

வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பானல் நிகழ்ந்த இந்த பாரிய வெடிப்பினால் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

Related posts

உணவு விடுதியில் தாக்குதல்; பணியாளர் படுகாயம்

reka sivalingam

சற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி!

Tharani

திருமலையில் சளிக்கு மருந்தெடுத்த குழந்தை பலி

reka sivalingam