உலகச் செய்திகள் செய்திகள்

பெய்ரூட் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கும்போது,

“லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டொன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது.

இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு நேற்று(05) வரை 70 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் பலி எண்னிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து உள்ளனர்” என்று தெரிவித்தது.

இந்த நிலையில் துறைமுக கிடங்கில் அமோனியம் நைட்ரேட் வைத்திருந்தது தொடர்பாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெய்ரூட் நகர அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கட்டார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையும் லெபனான் அரசுக்கு உதவ முன்வந்துள்ளது.

Related posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை

Tharani

“எனக்கு சிரிப்பாக வருகிறது” – விக்கியின் வாரமொரு கேள்வி பதில்

G. Pragas

திடீரென இறந்து விழும் காகங்கள் !

Tharani