செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பெருந்தொகை பீடி கட்டுக்கள் அழிப்பு!

சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள் உதவி மதுவரி ஆணையாளரின் பணிப்புரையில் மதுவரித் திணைக்களத்தினரால் எரித்தழிக்கப்பட்டது.

கடந்த 26ம் திகதி இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடிக்கட்டுகள் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டுப் பகுதியில் மதுவரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்படி இன்றையதினம் (15) யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி பி.ரகுநாதன், மதுவரி அத்தியட்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் யாழ்ப்பாணம் கொம்பன் படகோமட மயானத்தில் மண்ணெண்ணை ஊற்றி எரித்து அழிக்கப்பட்டன.

Related posts

வில்பத்து காடழிப்பு: வழக்கு விசாரணை…!

Tharani

சுமந்திரன் கருத்து தனிப்பட்டது; ஆயினும் ஆராய்வோம் – சேனாதி

G. Pragas

வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன?

G. Pragas