செய்திகள் பிரதான செய்தி

தேயிலை கொழுந்துகள் தனியாருக்கு வழங்குவது இடைநிறுத்தம்

பெருந்தோட்ட கூட்டுத்தாபன தோட்டங்களில் பறிக்கும் தேயிலை கொழுந்துகளை தனியார் தோட்ட நிறுவனங்களுக்கு விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அதற்கு பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திடம் 15 தேயிலைத் தோட்டங்கள் உள்ளதோடு, அவற்றில் தொழிற்சாலைகள் மூலம் உயர் ரக தேயிலைத் தூளை உற்பத்தி செய்யும் வாய்ப்பு காணப்படும் நிலையில், கடந்த காலங்களில் தனியார் தோட்ட நிறுவனங்களுக்கு இவ்வாறு தேயிலை கொழுந்துகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு ஒரு தோட்டத்தினால் வழங்கப்பட்ட தேயிலை கொழுந்திற்காக வழங்கப்பட வேண்டிய கூமார் ரூபா 50 இலட்சம் பணம் இதுவரை கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, உச்ச அறுவடை காலத்தில் விலை கோரல்களை மேற்கொண்டு பொருத்தமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து தேயிலை கொழுந்துகளை அந்நிறுவனத்திற்கு வழங்குமாறு, அமைச்சர் ரமேஷ் பதிரண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து கலந்துரையாடல்

reka sivalingam

பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுத் தலைவராக தேசப்பிரிய

Tharani

குடி நீர் வசதியின்றி களுத்துறை மாவட்டத்தில் 218000 மேற்பட்ட குடும்பங்கள்

Tharani

Leave a Comment