கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

பெருமளவு கசிப்பு, கோடா கைப்பற்றல்; ஐவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் கசிப்பு உற்பத்தி நிலையம் மற்றும் கசிப்பு விற்பனை நிலையம் என்பன மதுவரித் திணைக்களத்தினால் இன்று (13) காலை முற்றுகையிடப்பட்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்கரச்சி என்னும் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் அது தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேபோன் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு தயார் நிலையில் இரண்டு பரல்களில் இருந்த சுமார் 250 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டதுடன் அது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (150)

Related posts

மன்னார் பிரதேச சபை பட்ஜெட் 2வது முறையும் தோல்வி!

கதிர்

சீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

Bavan

மதவாச்சி குளத்தில் மூழ்கி மாணவர்கள் நால்வர் பலி!

G. Pragas