செய்திகள் பிராதான செய்தி

பெரும்படையுடன் வந்தாலும் தனித்து நின்று விவாதிப்பேன் – சவால் விடுத்த சஜித்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விவாதத்துக்கு வருமாறு விடுத்த அழைப்புக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. தனியாக வரத் தயங்கும் கோத்தா, முழுப்படையுடன் வந்தாலும் நான் தனியாக விவாதிக்க தயார் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கண்டி – கம்பளையில் இன்று (02) நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புகளை சரத் பொன்சேகாவுக்கு வழங்கவுள்ளேன். ஜனாதிபதி செயலணியூடாக இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்பாடுகளையும் நானே முன்நின்று நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

அதேபோல், நாட்டை அழிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட சகல விடயங்களையும் நான் ஒழித்துகட்டுவேன். பயங்கரவாத சக்திகளுக்கு தடையிட்டே தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்துவேன்.

அண்மையில் எதிரணி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்க விவாதத்துக்கு நான் விடுத்த அழைப்பு தொடர்பாக இன்று வரையில் பதில் கிடைக்கவில்லை. அவருக்கு தனியாக வரப் பயமெனில் முன்னாள் ஜனாதிபதியான, அண்ணனையும் அழைத்து வரலாம்.

எவ்வாறிருப்பினும், நான் தனியாகவே வருவேன். கோத்தா பெரும்படையுடன் வந்தாலும் தனித்து நின்று விவாதிக்க தயார் – என்றார்.

Related posts

தம்பதியினர் படுகொலை!

G. Pragas

நான் ஜனாதிபதியானதும் இவற்றையே செய்வேன் – சஜித் விசேட உரை

G. Pragas

அமைச்சு பதவியை ஏற்க மாட்டேன் – டக்ளஸ்

கதிர்

Leave a Comment