செய்திகள் பிரதான செய்தி

பெறுமதி சேர் வரியை குறைக்க அங்கீகாரம் கிடையாது

பெறுமதி சேர் வரியினை 8 வீதமாகக் குறைப்பதற்கு புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக்குழு மறுப்பு தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், இந்த வரிக்குறைப்புக்கான நியாயமான காரணங்களை பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் எதிர்வரும் கூட்டத்தின் போது சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிணைமுறி மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து மத்திய வங்கியின் சொந்த அவதானிப்புகளை எதிர்வரும் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் பொதுநிதிக் குழு கோரியுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு கிழக்கு புகையிரத காப்பாளர்கள் போராட்டம்

கதிர்

கொடிகாமத்தில் வீதியில் மயங்கி விழுந்து ஒருவர் பலி!

G. Pragas

பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்; இலங்கை சிறுபான்மையினர் குறித்து கவனம்

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.