in , ,

பேச முடியாமல் இருந்தோர் பல்கலைக்கழகம் எங்கே என்கின்றனர் – இப்படி சாெல்கிறார் ஜீவன்

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பேச முடியாத சிலர் இன்று மலையக பல்கலைக்கழகம் எங்கே என கேட்பதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

லிந்துலை – டயகம பிரதான வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். மேலும்,

1000 ரூபா சம்பள விடயம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் எம்மால் எதனையும் செய்ய முடியாது. மே 5ம் திகதி தீர்ப்பு வந்த பின்னரே எம்மால் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். இ.தொ.காவே சம்பள பிரச்சினையை நீதிமன்றம் கொண்டு சென்றதாக தற்போது சிலர் தூண்டி விடுகின்றனர்.

இ.தொ.கா சொன்னதை செய்தது. அதாவது சம்பள நிர்ணய சபையின் ஊடாக 1000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. கம்பனிகளே நீதிமன்றத்தை நாடியள்ளன.

குடும்பம் ஒன்றின் கொட்டகை வீடு எரிந்து நாசம்; ஆவணங்களும், பணமும் எரிந்தன!

ஈபிடிபி உட்கட்சி மோதலில் ஒருவர் காயம்!