செய்திகள் யாழ்ப்பாணம்

பேராசிரியரின் நிதி உதவியில் யாழ் பல்கலை மாணவர்களுக்கு கைபேசிகள்

ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவாலிங்கம் சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிமார்ட் தொலைபேசி வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, பேராசிரியர் சிவானந்தன் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு கைபேசிகளைக் கொள்வனவு செய்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும், பௌதிகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் பு.ரவிராஜன் மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி முறையினூடாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இணையவழிக் கற்றல் வசதிகள் பற்றி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், திறன் பேசி வசதிகள் இல்லாத மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அனுசரணையாளர்களின் மூலம் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Related posts

மாங்குளம் புதைகுழியில் மனித எச்சங்கள் – துப்பாக்கி ரவைகள் மீட்பு!

G. Pragas

அரச திணைக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு!

Tharani

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் நிமால் சந்திப்பு

G. Pragas