செய்திகள்

பேருந்து குடைசாய்ந்து 31 பேர் படுகாயம்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா, வனராஜா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (08) மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பாடசாலை பேருந்து ஒன்று எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும்போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் பேருந்து சாரதி உட்பட 31 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

இராணுவ வீரரை தாக்கிய சம்பவம் – எண்மருக்கு பிணை!

G. Pragas

அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகிறது

Tharani

அரசியலமைப்பு பேரவை 23 இல் கூடுகிறது

Tharani