செய்திகள் பிரதான செய்தி

பொதுத் தேர்தலில் தமிழர்களிடையே மாற்றம் கட்டாயமானது!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (20) அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார். மேலும்,

இந்த மண்ணில் பல இலட்சம் மக்கள் உயிர் நீத்திருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை நாம் இழந்திருக்கின்றோம். இதற்காக ஒரு தலைமுறையே போராடி இருக்கின்றது.

அந்த வகையில் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு என்பது முக்கியம். எதிர்காலத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடிய வகையில் தங்களது எதிர்காலத்தை தாங்களே திட்டமிடக் கூடிய வகையில் தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை தாங்களே ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரங்கள் அவசியம். ஆகவே, ஒரே நாட்டுக்குள் அவ்வாறானதொரு அதிகார பகிர்வு என்பது முக்கியமானதொரு விடயம்.

ஆகவே, அபிவிருத்தி, அரசியல் தீர்வு ஆகிய இரண்டு விடயங்களையும் எவ்வாறு சமாந்தராமாக கொண்டு செல்வது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றம் என்பது அவசியம் தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்னெடுத்து செல்லக் கூடியவர்கள் அதற்கான காத்திரமான வழிமுறைகளை கண்டறிந்து செயற்படக் கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

ஆகவே, அந்த மாற்றத்தை நோக்கி வருகின்ற பொது தேர்தலில் சரியானதொரு மாற்றத்திற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை – என்றார்.

Related posts

பாடசாலை மலசல கூடத்துக்கு அடிக்கல்

Tharani

ரவிவர்மனின் ஓவியங்களாக மிளிரும் இந்திய நடிகைகள்!

Bavan

சுவிஸ்லாந்து ஞானலிங்கேஸ்வரர் ஆலய நிதியில் உதவி

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.