செய்திகள் யாழ்ப்பாணம்

பொது நோக்கு மண்டபம் திறந்து வைப்பு

கொடிகாமம் தெற்கு ஜே328 கிராம அலுவலர் பிரிவில் பொது நோக்கு மண்டபத்திறப்பு விழா 1/1/2020 புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் சி.சிவனேசன் தலைமையில் நடைபெற்றது 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இணைப்பாளர் செ.பிரதாப், கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியத் தலைவர் இ.கந்தசாமி, கிராம மக்கள், அதிபர், ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் 2 லட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று முன்தினம்  மக்களிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

வரலாற்றில் இன்று – (24.01.2020)

Tharani

முகக்கவசம் அணியாவிட்டால் சிறை

கதிர்

யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு

Tharani