கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

பொத்துவில் விபத்தில் ஒருவர் பலி; மோட்டார் சைக்கிள் இரண்டாகியது

அம்பாறை – பொத்துவில் பொலிஸ்ப்பிரிவு, பொத்துவில் ஊரணி வீதி வளைவில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் கோமாரியில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிலின் முன் பகுதி வேறாகவும் பின் பகுதி வேறாகவும் இரண்டாக உடைந்துள்ளது.

பொத்துவில் கோமாரியை சோர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஞானசூரியம் ரதீஸ்வரன் (38) என்பவரே பலியாகியுள்ளார்.

Related posts

மஹிந்தவை எதிர்த்து உண்ணாவிரதம்: தம்பிராசா கைது!

G. Pragas

எரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு

G. Pragas

ஜமாஅத் பயங்கரவாதிகள் சுரங்கம் தோண்டினரா? விசேட விசாரணை

G. Pragas

Leave a Comment