இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு இலங்கை வரவுள்ள படக்குழு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு அடுத்த மாதம் அளவில் இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மாபெரும் சரித்திரப் புகழ்பெற்ற காவியமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் படமாக்குகின்றமை யாவரும் அறிந்ததே. அந்தவகையில், இந்தியாவில் கொரோனாத் தொற்றின் தீவிரம் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளாதோடு, வெளிநாட்டுப் படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தாய்லாந்தில் படமாக்கவிருந்த பொன்னியின் செல்வனின் படப்பிடிப்புகள் யாவும் இலங்கையில் படமாக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது. மேலும், பொன்னியின் செல்வன் நாவலின் குறிப்பிட்டளவு கதை இலங்கையில் இடம்பெறுவது போன்றே எழுதப்பட்டிருப்பதால், படக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அரவிந்த்சாமி, பார்த்தீபன், நயந்தாரா, ஐஸ்வர்யாராய், கீர்த்திசுரேஸ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிப்பதோடு, மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசையமைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆவரங்கால் மத்திய முன்பள்ளியின் 45வது ஆண்டு விழா!

Tharani

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு – 6 பேர் கைது

Tharani

தந்தை மகன் சிறைக்குள் கொல்லப்பட்ட வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி!

G. Pragas