செய்திகள் மலையகம்

பொருட்களின் விலையை குறைக்க கோரி போராட்டம்!

ஜெட் வேகத்தில் உயர்வடைந்துள்ள பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாற வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி அமைப்பினர் ஹட்டனில் இன்று (19) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில், நாடாளுமன்ற வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகையில்,

“கொரோனா வைரஸ் உட்பட மேலும் பல பிரச்சினைகளால் மக்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக மனிதநேயமற்ற இந்த அரசாங்கம் பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடன் குறைக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.” – என்றனர்.

Related posts

கடும் காற்றினால் அழிந்து போன பப்பாசி மரங்கள்

G. Pragas

இரு பேருந்துகள் விபத்து; சாரதிகள் காயம்

கதிர்

ராஜித எழுதிக் காெடுத்ததை தெரிவித்தாேம்! – வெள்ளை வான் சாரதிகள்!

reka sivalingam