கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

பொருட் கொள்வனவில் வாழைச்சேனை மக்கள் ஆர்வம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் இன்று (16) 10 மணி நேரத்துக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பொது மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது என்று “உதயன்” செய்தியாளர் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சந்திவெளி பொது மைதானம், கிரான் பொது மைதானம், செம்மண்ணோடை சாட்டோ மைதானம், வாழைச்சேனை பொது மைதானம், பேத்தாளை பொது மைதானம் ஆகியவற்றில் வியாபாரம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (150)

Related posts

இலங்கையில் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு படகு

Tharani

மணல் அகழ்வினால் சுற்றுச் சூழல் பாதிப்பு!

Tharani

மருத்துவக் கழிவு முகாமைத்துவம் ஆபத்தான நிலையில்…!

Tharani