in , ,

பொற்கேணியில் புரையேறி 25 நாள் சிசு பலி!

திருகோணமலை – தம்பலகாமம், பொற்கேணி பகுதியில் பிறந்து 25 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று முன் தினம் (18) இரவு குழந்தைக்கு பாலுாட்டி தூங்க வைத்த தாய், மீண்டும் 12 மணியளவில் குழந்தையை பார்த்துள்ளார்.

இதன்போது குழந்தையின் வாய், மூக்கு பகுதிகளில் நுரை வருவதனை அவதானித்த அவர், உடனடியாக குடும்பத்தாரின் உதவியுடன் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

ஆனாலும் குழந்தை முன்கூட்டியே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் ஈஸ்டர் பயங்கரவாத ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!

நீர்த் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை பலி!