செய்திகள்

பொலிஸார் குறித்து தவறான பிரச்சாரம்; மறுக்கிறார் பொலிஸ் பேச்சாளர்

பொலிஸ் அதிகாரிகள் இருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர,

யாழ்ப்பாணம் – கோட்டை பகுதியில் கடந்த 28ம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அந்த பிரதேசத்திற்கான வீதி பாதுகாப்பு, உயர்ந்த கட்டட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் என்பவற்றுக்காக இரு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் டீ.டி.ஆர்.தசநாயக்க மற்றும் யாழ் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரஷாந் பெர்னான்டோ ஆகியோரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பிரசாரக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறித்த வேட்பாளர் இந்த பொலிஸ் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது, அதனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்திருந்த நபர் ஒளிப்படம் எடுத்து பொலிஸ் அதிகாரிகள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று பொய்யான செய்தியை பரப்பியிருக்கிறார்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக இவ்வாறு பரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது – என்றார்.

Related posts

கோத்தாபயவின் மனு நிராகரிக்கப்பட்டது

G. Pragas

மாடியில் இருந்து வீழ்ந்தவர் பலி!

G. Pragas

சென்னையிலும் எழுக தமிழ்!

G. Pragas

Leave a Comment