செய்திகள் பிரதான செய்தி

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்; தேரர் கைது!

வாரியபொல பொலிஸ் நிலையத்தில் வைத்து கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் தொடர்பான விவகாரத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கசிப்பு உற்பத்தி செய்யும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என்று குறித்த தேரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் கோரியுள்ளார்.

இதனை பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த அந்த பொலிஸ் அதிகாரி, பதிவேட்டிலும் தொலைபேசி அழைப்பு பற்றி பதிவு செய்துள்ளார்.

மறுநாள் குறித்த பதிவுகளை நீக்குமாறு தொலைபேசியில் அழைப்பெடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை தேரர் எச்சரித்துள்ளார்.

பின்னர் தேரர் மற்றும் கசிப்பு உற்பத்தியாளர் உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுடன் சென்ற ஒருவர் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையிலேயே தேரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பௌத்த கோட்பாட்டை 100 வீதம் பின்பற்றுபவன் நான் – சஜித்

G. Pragas

கோத்தாவுடன் பேசிய ட்ரம்பின் ஆலோசர்கர் ஓப்ரையன்

G. Pragas

மஹிந்த அணியில் இருந்து சஜித் பக்கம் முதலாவது தாவல்

G. Pragas