இலங்கை விமானப் படையால் நிகழ்த்தப்பட்ட முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலையின் 14ம் ஆண்டு நினைவேந்தல் செஞ்சோலை வளாக வாயிலில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று (14) காலை சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர்.
இதன்போது பொலிஸாரால் நிகழ்வுக்கு தடை ஏற்படுத்தப்பட்ட போதிலும் அதனை மீறி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பாதிக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டு பொலிஸ், இராணுவ அச்சுறுத்தலை மீறி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
(பட உதவி – மதி & குமணன்)