செய்திகள் பிரதான செய்தி

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தலைவராக அபோன்ச

பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத் தலைவரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சஜீவ மெதவத்த உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் நலப்பிரிவுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்று இந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைவராக பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.கே.ஜே அபோன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

கைப்பற்றிய போதைப் பொருட்களை கடத்தல்காரர்களுடன் இணைந்து விற்பனை செய்த பொலிஸ் போதை ஒழிப்பு பணியக பொலிஸார் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுப்பிட்டியில் முதியோர்களுக்கு உதவிகள்

G. Pragas

கிளி வளாகத்தில் நடந்த சம்பவம் கல்வியின் பின்னடைவு

G. Pragas

பாரிய விளைவை சந்தித்துள்ள பொருளாதாரம்: ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Tharani