செய்திகள் பிரதான செய்தி

போக்குவரத்து விதி மீறல்; தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லையை நீடிப்பதாக, தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால்மா அதிபர், ரஞ்சித் ஆரியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலிஸாரினால் 2020 மார்ச் மாதம் 01ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள ஸ்தலத்தில் விதிக்கப்படும் தண்டப்பண சீட்டு, 14 நாட்கள் கடந்த போதிலும் அது தொடர்பில் எந்தவித மேலதிக தண்டப்பணமும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழமையான கடமைகளுக்காக தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னரும் இத்தண்டப்பணம் செலுத்துவதற்கு மேலதிக சலுகைக் காலத்தை வழங்குவதற்கும் இலங்கை தபால் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்துடனான உடன்பாட்டுக்கு அமைய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

Related posts

சுதந்திர ஊடக மையத்தில் சுதந்திரதினம்

G. Pragas

கொழும்பில் 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு!

Tharani

கொரோனா வைரஸ் அச்சம் – மலையகத்தில் 76 பேர் சுயதனிமைப்படுத்தலில்…!

Tharani