செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி!

இலங்கையில் போதைப்பொருள் நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக 340 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் நடவடிக்கைகள் அதிரித்துள்ள நிலையில், போதைப் பொருள் கடத்தற்காரர்கள் மற்றும் அதற்கு அடிமையாகியுள்ள நபர்களை இணங்கண்டு கொள்வதற்கான நவீன உபகரணங்களின் தேவை குறித்து பொலிஸாரினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும், தேவையான நவீன உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் ஜப்பான் அரசாங்கத்தினால் இவ்வாறு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதன்படி, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல மற்றும் ஜப்பான் தூதுவர் சுகியமா அகிரா ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

லாரியஸ் விருதை வென்றார் சச்சின்!

Bavan

ஓகஸ்ட் வரையில் தேர்தல் இல்லை?

reka sivalingam

கனடாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

கதிர்