செய்திகள் பிந்திய செய்திகள்

போதைப்பொருள் கண்டறியும் நடவடிக்கையில் ரோபோக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைக்காக இரு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளை கண்டறிய இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இவை சீன அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது. இந்த ரோபோக்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்திற்கு பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

கதிர்

குழந்தையை தாக்கிய தாய் கைது!

கதிர்

ஜனாதிபதிக்கு ரணில் விடுத்த கோரிக்கை!

G. Pragas