பிந்திய செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

போதைப் பாவனையை கட்டுப்படுத்த விற்பனை, விநியோகத்தை தடுத்தல் அவசியம்

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு போதைப்பொருள் விற்பனை, விநியோக மார்க்கங்களைக் கட்டுப்படுத்துவதே முதன்மையானது. போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியே வந்ததும் மீண்டும் போதைப் பாவனைக்கு அடிமையாகும் சூழலே தற்போதுள்ளது.

இவ்வாறு பேராசிரியர் சிவயோகன் தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் போதைப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையால் ஒரு தனிமனிதனிடம் உடல், உளம் சார்ந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளை தோற்றம் பெறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த போதைப் பொருள் பாவனைத் தரவுகளை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிடும்போது, தற்போது போதைப்பொருள் பாவனை தீவிரம் பெற்றுள்ளமையைக் காண முடிகின்றது.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் புனவாழ்வைக் குறிப்பிட்ட காலத்துக்கு போதைப் பாவனையைக் கட்டுப்படும் ஒன்றாகவே கருதமுடியும். புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த பின்னர், மீண்டும் போதைப் பழக்குத்துக்கு அடிமையாகும் நிலைமையே காணப்படுகின்றது.

இந்தப் பிரச்சினைக்கான முழுமையாக தீர்வாக போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் விநியோகம் என்பவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். – என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266