கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

போதைப் பிரியர்கள் – டீலர்களினால் அவதி – மட்டு மக்கள் கவலை!

நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலாக்கி மக்களை வீடுகளுக்குள் இருக்க வைத்து கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அரசாங்கத்தை மக்கள் பாராட்டிவரும் இச்சந்தர்ப்பத்தில், போதை வியாபாரிகளின் கெடுபிடிகளும் போதை பாவிப்பவர்களின் வன்முறையினாலும் மக்களிடையே ஒருவித அச்சம் காணப்படுகின்றது.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்வதற்காகவும் ஊரடங்கு சட்டத்தை அரசு இடையிடையே நீக்குகின்றது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் போதைப் பொருள் வியாபாரிகள் வெளியூர்களுக்கு சென்று போதைப் பொருட்களைக் கொள்வனவு செய்து, உள் வீதிகளுக்கூடாகக் கொண்டு வருவதாகவும், அத்துடன், இவர்கள் ஊரடங்கு அமுல்படுத்தும் போது உள்வீதிகளைப் பயன்படுத்தி கிராமப்புறங்களுக்கு போதைப் பொருட்களைக் கடத்துவதாகவும் தமது சைக்கிள், மோட்டர் சைக்கிள்களைக் கலைத்து வைத்து விட்டு சில வீடுகளில் ஒன்று கூடுவதாகவும், அங்கு போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விட்டு கலைந்து செல்வதாகவும், இவர்களில் தற்சமயம் ஒருவருக்கு கொராேனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் வாழும் குடும்பங்கள் மற்றும் அக்குடும்பங்களின் சூழல் போன்றன செல்லும் இடங்களெல்லாம் பரவும் அபாயம் மிகவும் கூடுதலாகவுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மாஞ்சோலை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, நாவலடி, சூடுபத்தினசேனை போன்ற பிரதேசங்களில் வேறு பிரதேசங்களில் உள்ள போதை வியாபாரிகள் வருவதாகவும் மற்றும் இப்போதை வியாபாரிகளின் மற்றும் போதைப் பாவனையாளர்களின் நடமாட்டம் ஊரடங்கு அமுலிலுள்ளபோதும் கூடுதலாக இருப்பதாக அப்பிரதேசவாசிகள் மிகவும் கவலையடைகின்றனர்.

இவர்களுக்குரிய போதைப்பொருள் கிடைக்காத விடத்து வீட்டுள்ளவர்களுடன் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் வீட்டிலுள்ளவர்கள் வெளியே சொல்ல முடியாமல் தயங்குவதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஊடரங்கு அமுலிலுள்ள போது ரோந்துப் பணிகளில் ஈடுபடும் பொலிஸாரை இலக்கு வைத்து தண்ணீர், ஒயில், முட்டைகளால் தாக்கி விட்டுத் தப்பிச்சென்று விடுகின்றனர் என்றும், இதன் பின்னர் அவ்வீதிகளால் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வருகின்ற அப்பாவிகள் இப்பொலிஸாரினால் கைது செய்யப்படுவதாகாவும் சமூக வலயத்தளங்களில் பொது மக்களின் கருத்துகளைக்காண முடிகின்றது.

நாட்டில் மதுப்பாவிப்பவர்களுக்கு கொராேனா விரைவாகத் தாக்கலாம் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீக்கப்படும் போதும் கூட மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போதைப் பாவனையாளர்கள் அவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்படும் எனவே, இவர்களில் கொராேனா போன்ற தொற்று விரைவாகத் தாக்கலாம் என பொதுமக்கள் பயப்படுகின்றனர்.

எனவே, இப்போதை வியாபாரிகளைச் சட்டத்தின் முன் கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர்களுக்கான நீதிமன்றில் பிணை வழங்காது, மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் போதைப் பாவனையாளர்களைக் கைது செய்து அவர்களைப் புனர்வாழ்வு முகாம்களுக்கு உடனடியாக அனுப்ப முப்படையினரும் பொலிசாரும் மிகவும் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். (150)

Related posts

இன்றைய நாள் ராசி பலன்கள் (14/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

இன்றைய நாணயமாற்று விகிதம்

Tharani

அரச – தனியர் துறை செயற்பாடுகள் நாளை ஆரம்பம் – அறிவிப்பு!

G. Pragas