செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

போதையில் சுற்றுலாவிப் பெண் மீது கூட்டுப் பாலியல் சேட்டை -காரை­ந­க­ரில் 10 இளை­ஞர்­கள் கைது

காரை­ந­க­ருக்கு சுற்­று­லா­வி­யாக வந்­தி­ருந்த ஸ்பெயின் நாட்­டுப் ­பெண்ணை 10 க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் ஒன்­றி­ணைந்து அச்­சு­றுத்தி, பாலி­யல் சேட்­டை­யில் ஈடு­பட்டனர் என முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டை­யில் , பாலி­யல் சேட்டை புரிந்­த­ன­ரென அடை­யா­ளம் காணப்­பட்ட 10 இளை­ஞர்­கள் நேற்­றி­ரவு கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் காரை­ந­கர் கசூ­ரினா கடற்­க­ரைக்கு அண்­மை­யா­க­வுள்ள வெளிச்­சக் கூட்­டுக் கோபு­ரப் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

சுற்­று­லா­வி­யாக வந்த பெண்­ணும் அவ­ரது நண்­ப­ரும் சென்று கொண்­டி­ருந்­த­போது அவர்­களை 10 க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் சுற்றி வளைத்து, தகாத வார்த்தை பிர­யோ­கங்­க­ளை­யும் மேற்­கொண்­டுள்­ள­னர். அவர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்து கொண்­டுள்­ள­னர். இதன் பின்­னர் சில இளை­ஞர்­கள் சுற்­று­லா­விப் பெண்­ணு­டன் பாலி­யல் சேஷ்­டை­யி­லும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

நீண்ட போராட்­டத்­தின் பின்­னர் அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பித்த பெண், பொலி­ஸா­ரி­டம் வழங்­கிய முறைப்­பாட்­டுக்கு அமை­வாக ,நேற்று இரவே 10 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214