in , ,

போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – மனைவி வாக்குமூலம்

அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று (19) காலை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

மனைவியால் திருகுவளையால் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதிவான் பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அதேவேளை, கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் வழமை போன்று இரவு போதையில் வந்து தர்க்கப்பட்டு தாக்கிய போது, தான் ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கியபோது, அவர் உயிரிழந்துவிட்டார் என விசாரணையில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வேலியில் விபத்து! இளைஞன் ஒருவன் மரணம்!

20 – 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி