செய்திகள் பிரதான செய்தி

போதை மாத்திரைகள் விற்பனை செய்தவர் கைது!

சூரியவெவ – வெவேகம பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு போதை குளிசைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் சூரியவெவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமையவே அதே பகுதியில் விவசாயம் செய்து வந்த (24 வயது) இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 58 போதை குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த குளிசையானது நோயினால் அதிக வலியுடன் காணப்படும் நோயாளிகளுக்கும் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வைத்தியரின் ஆலோசனைக்கமைய வழங்கப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குளிசைகள் 55 ரூபாய்க்கு மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரை அம்பாந்தோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல்: விசாரணைகள் மீள ஆரம்பம்

Tharani

ரஜினி கூத்தாடி என்றால் நான் பயங்கரவாதி என கூறுவதை சரி என்பார்களா?

G. Pragas

“திலீபன் வழியில் வருகிறோம்” நடைபயணம் யாழ் நோக்கி வருகிறது

G. Pragas

Leave a Comment