in

போராட்டத்தை நிறுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு!

கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அருகில் இன்று (02) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல நிராகரித்துள்ளார்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக மக்கள் புலனாய்வு மையம் என்ற அமைப்பு நடத்தும் போராட்டத்தை நிறுத்த கோரிய கோரிக்கையை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் வழங்கிய எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களையும் மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டத்தை அமல்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினார்.

எதிர்ப்புப் பேரணிகள் கருத்து சுதந்திரம் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அந்த உரிமையை நசுக்க கொவிட் தொற்றுநோயைப் பயன்படுத்துவதால் நாடும் அரசாங்கமும் கடுமையான சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்று கூறினார்.

விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் அறிவிப்பு.

மேலும் 63 மரணங்கள் பதிவு!