உலகச் செய்திகள் செய்திகள்

போலிக் கூட்டு வன்புணர்வு; பிரித்தானிய யுவதிக்கு தண்டனை!

ஹோட்டல் ஒன்றில் வைத்து 12 இஸ்ரேலிய இளைஞர்கள் தன்னை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டிய பிரித்தானியாவை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவருக்கு சைப்ரஸ் நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத சிறைத் தண்டனையை வழங்கி இன்று (07) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சைபிரஸில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக குறித்த பெண் குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பெண் பொய்யாக குற்றம் சாட்டி உள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பெண்ணுக்கு ஆதரவான பெண்கள் அமைப்புக்கள் அவரை நம்புவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தேசிய மரநடுகை திட்டம் ஆரம்பம்

reka sivalingam

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது!

G. Pragas

“அஜித்துக்கு அப்போதே ஆயிரக் கணக்கில் ரசிகர் மன்றங்கள் இருந்தது!” – சரண்

Bavan