செய்திகள் பிந்திய செய்திகள்

போலிச் சட்டத்தரணியை தேடும் பொலிஸ்; மக்களிடம் உதவி கோரல்

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பிணையில் விடுவிப்பதற்காக சட்டதரணி ஒருவரை போல் போலியாக செயற்பட்ட நபரை அடையாளம் காணுவதற்காக பொது மக்களிடம் பொலிஸ் தலைமையகம் உதவி கோரியுள்ளது.

தங்காலை நீதிவான் நீதிமன்றத்திற்கு சட்டதரணி‍யைப் போல் முன்னிலையாகி பிணை கோரி மனுவொன்றை தாக்கல் செய்த ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.

சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக அவரின் புகைபடமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், அவரை அடையாளம் கண்டால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதற்காக இரு தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டால் 047-2240229 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்கல்லை பொலிஸ் நிலையத்திற்கும், 077-2874343 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தகவல்களை வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மழை பெய்யும் சாத்தியம் உண்டு

reka sivalingam

கொரோனாவில் இருந்து விடுதலையடைந்தது அக்கரைப்பற்று

G. Pragas

கசிப்புடன் இருவர் கைது!

G. Pragas