in ,

போலி குண்டு தாக்குதல் தகவல் வழங்கியதாக யுவதி கைது!!

புத்தளம் – தங்கொட்டுவ பொலிஸ்நிலையம் மீது குண்டு தாக்குதல் நடக்கவுள்ளதாக போலித் தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் 23 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு இவ்வாறு போலி தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த யுவதியை நேற்று (18) இரவு தங்கொட்டுவ – மொஹதொட்டமுல்லயில் வென்னப்புவ பொலிஸார் கைது செய்தனர்.

எனினும் கைது செய்யப்பட்டுள்ள யுவதி, தான் நாவலப்பிட்டியில் உள்ள தனது சகோதரியின் இல்லத்திற்கு சென்றதாகவும், யார் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார் என்பது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் நால்வர் உட்பட யாழில் இன்று 7 பேருக்கு உறுதி!!

கேரளாவில் 340 கிலோ ஹெரோயினுடன் இலங்கையர்கள் ஐவர் கைது!