செய்திகள் பிரதான செய்தி

போலி நிறுவனத்திற்கு 200 கோடி வழங்கி ஏமாந்த இலங்கை அரசு

போலி நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை அரசு 200 கோடி வழங்கியது என்று இன்று (16) தாமரைக் கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அங்கு பேசிய அவர், 2012ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்ததாக முகவரியொன்று குறிப்பிடப்பட்ட அலிட் எனும் நிறுவனத்துக்கு தாமரைக் கோபுரம் கட்டுவதற்காக இலங்கை அரசு 200 கோடி ரூபாய் பணத்தை முற்பணமாக செலுத்தியிருந்தது.

இந்த தாமரைக் கோபுரத்துக்கான கடனான 16 பில்லியனை சீன வங்கியொன்று தர உத்தரவாதம் செய்திருந்தது. அந்த முற்பணம் வங்கிக்கு செலுத்த வேண்டிய பணமாகும். அலிட் நிறுவனம் முற்பணத்தை வாங்கிக் கொண்டு காணாமல் போனதன் காரணமாக சீன வங்கி தருவதற்கு ஒப்புக் கொண்ட 16 பில்லியன்களில் 12 பில்லியன்களை மட்டுமே கடனாக கொடுத்தது. அதனால் இந்த கோபுரம் இன்னும் 100 சத வீதம் முழுமை பெறவில்லை.

2015 இல் இதுபற்றி விசாரணை நடத்திய போது அலிட் எனும் நிறுவனம் இருந்த முகவரியில் போய் விசாரிக்கும்படி சீன அரசை கேட்டுக் கொண்டோம். இதன்போது அந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனம் இல்லை என சீன அரசு எமக்கு தகவல் தந்தது. குறித்த அலிட் நிறுவனம் போலவே 200 கோடி ரூபாய் பணமும் இல்லாமல் மாயமாக மறைந்து போனது – என்றார்.

Related posts

எதிர்க்கட்சி தலைவர் பதவி! நாளை இறுதி தீர்மானம்!

Tharani

பண்டாரவளைவிபத்து; ஒருவர் காயம்

reka sivalingam

ரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு

G. Pragas