in , ,

மகனால் தாக்கப்பட்ட தந்தை பலி; மகன் கைது! – யாழில் சம்பவம்

மனநிலை பாதிக்கப்பட்ட மகனால் தாக்கப்பட்ட தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (28) புத்தூர் – இராசபாதை வீதியில், சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சி.சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.

தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மகனுக்கும் தந்தைக்கும் இடையில் காலை சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மகன் இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியுள்ளார்.

கொலையைடுத்து தலைமறைவாக இருந்த மகன் ஊர் மக்களால் பிடித்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனநோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் தினந்தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் இளைய மகன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி பொலிஸார், தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகின்றனர்.

ஓ/எல் பரீட்சைக்கான ஏற்பாடுகள் யாழில் தயாரானது!

உடல்களை அடக்க மன்னார், அம்பாறையில் இடங்கள் கண்டறிவு!