சினிமா செய்திகள்

மகனுடன் நடித்த தமன்னாவுடன் நடிக்க ஆசைப்பட்ட தந்தை

வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராம் சரண், சிரஞ்சீவி பற்றி சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’சைரா நரசிம்மா ரெட்டி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, தயாரிப்பாளர் ராம்சரண், தமன்னா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர்கள் லிங்குசாமி, சசி, விக்ரமன், தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

ராம் சரண் பேசும்போது, ‘இந்த படம் கதையை அப்பா சிரஞ்சீவி 9 வருடங்களுக்கு முன்பாக கேட்டார். இதை பண்ண முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் அப்பா அரசியலில் நுழைந்ததால் தாமதமானது. மீண்டும் கதை கேட்டு இப்படத்தை தொடங்க ஆரம்பித்தோம்.

அப்பா என்னிடம் தமன்னாவுடன் நான் நடிப்பேன் என்று கூறினார். அதற்கு என்னுடன் நடித்த தமன்னா உங்களுடன் எப்படி நடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால், சினிமாவில் எல்லாம் சாத்தியம், என்னுடன் நடித்த தமன்னா, இப்படத்தில் அப்பாவுடன் நடித்திருக்கிறார்.

Related posts

கொரோனாத் தொற்று எண்ணிக்கை 101 ஆக உயர்வு!

Bavan

புத்தளத்தில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

G. Pragas

முக்கிய வரிகள் இரத்து!அமைச்சரவை தீர்மானம்

reka sivalingam