செய்திகள் பிரதான செய்தி மலையகம்

மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை

மகளை கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (4) தீர்ப்பளித்துள்ளது.

நுவரெலியா – இராகலை ஹல்கன்னோயாவை சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு தனது மூன்றரை வயதுடைய சுரேஷ் இந்தியா என்ற மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியின் மனைவி கடந்த 2014ம் குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பெண் மற்றுமொரு இலங்கை நபருடன் சட்டவிரோத உறவை பேணி வந்ததோடு, தனது குழந்தைகளை கவனிக்காது இருந்துள்ளதால், குற்றவாளி தனது மூன்றரை வயதுடைய மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

Related posts

கோட்டை – பதுளை இடையில் நாளாந்த ரயில் சேவை

Tharani

டக்ளஸ்க்கு சாணி அடி!

Bavan

குடுபஸ்தரை பொலிஸார் தாக்கிய குற்றச்சாட்டு; ம.உ.ஆ விசாரணை!

G. Pragas