செய்திகள் விளையாட்டு

மகாஜனாக் கல்லூரி ச.தீபிகா கோலூன்றி பாய்தலில் புதிய சாதனை!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் உடல்நலக் குறைபாட்டையும் தாண்டி தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.தீபிகா புதிய பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இன்று (02) நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.தீபிகா 3.25 மீற்ரர் பாய்ந்து புதிய சாதனைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார். 2015ம் ஆண்டு அனுஸ்வர விக்கிரமசிங்கவினால் 3.12 மீற்ரர் இருந்த உயரத்தையே இவர் முறியடித்தார்.

Related posts

தமிழர்கள் கடத்தல் -கடற்படை வீரர்களுக்கு மறியல்

G. Pragas

நீதிமன்றில் முன்னிலையாக அஜித்துக்கு அழைப்பு!

Tharani

ஹெரோயினுடன் உத்தியோகத்தர் கைது!

Tharani