கிளிநொச்சிகிழக்கு மாகாணம்செய்திகள்பிரதான செய்திமுல்லைத்தீவுயாழ்ப்பாணம்

மகாராணி மறைவு: செப். 19 தேசிய துக்க தினம்

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றுமுன்தினம் தனது 96ஆவது வயதில் லண்டனில் மறைந்தார்.

இந்தநிலையில் அவரை நினைவுகூரும் முகமாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு எதிர்வரும் 19ஆம் திகதியை தேசிய துக்கதினமாக அறிவிக்குமாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அன்றைய தினம்வரை இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றுமாறும் அரச நிறுவனங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282